GrowServe E-Solutions Private Limited

We are in the e-commerce business for a cause, a purpose and with a mission. Quietly, peacefully, yet decisively we are moving forward as if in a combat, pitted against giants of the multinationals and bigwigs in e-commerce industry.

We are here to protect the local trade and commerce which has been the integral part of Indian economy for centuries.

What prompts us to be in this business

The way multi-national bigwigs are plunging into the Indian trade and commerce is alarming. They are coming with huge capital for massive investment to take on the market whole and complete. Left to themselves they will gobble up the entire business, reducing traditional traders as puppets in their hands.

East India Company came with an agenda of trading. Ultimately they enslaved the entire nation. The World Trade Organization (WTO), the Word Bank and nations behind dictate terms on all aspects of economy. They are marching ahead swiftly and steadily, encroaching upon our ancestral wisdom and trading practices.

Successive Governments, both at the central and states, are only keen to follow directions as imposed by WTO.

E commerce business, pioneered by these bigwigs, has deep pocket. Their investment is huge and gigantic. Their advertisements are king sized. They offer seductive discounts that small traders can never think of. Their presence turns out to be mighty and monstrous.

Small traders, family businesses and numerous entrepreneurs will lose out their business and livelihood, sooner than we think. Something has to be done immediately – fast, quick and decisive - to prevent erosion of their hold.

It is in this context GrowServe e-Solutions (GSES) has designed a business system that will provide safeguard to small time traders. We can’t reverse the trend. We cannot stick to the old system, stay burying our head like the proverbial ostrich and expect the world to change. We need to do something innovatively and that too rapidly and decisively.Following the trend and using the same platform of e-commerce, GSES has come forward to protect the trade and industry of the soil. We are here to serve you – yes grow and serve you with your patronage.

Likely consequences if we ignore the call of the time

Aggressive marketing, irresistible offers and capability to stay long despite mammoth loss will enable these bigwigs to firmly establish. Once the community of small traders is wiped off, then these bigwigs will rule the roost. What they command will become the way of life. Traditional traders would have lost their ground and consumers will have no choice. Do we want this situation to emerge? If we do not act now, we are going to lose for eternity. India will never become super power. It will become a sucked power. Together, we can make a difference. And, GSES is determined to make that difference.

Our Mission

To safeguard and protect local trade, commerce and small time entrepreneurs from the threat of multi-nationals wiping out their business.
To provide a safe and trust worthy platform to traders and consumers to sell and buy goods and services at optimal cost.
To contribute to national economy by adopting ethical practices and systems in business
To serve consumers with best in class products at most competitive terms through reliable traders, giving the consumer the choice of trader in their proximity.
To continually research, innovate and upgrade technology to provide cutting edge methods and practices to traders as well consumers.

Our Vision

GrowServe e-Solutions is a nationwide m-commerce service provider protecting the interest of Indian trade, commerce and indigenous practices while serving the customers best in terms of price, quality and delight. For the traders, GSES is the most comfortable service provider keeping the interest of the Indian Trading Community as its prime objective.For the Indian consumers it is the most preferred portal, reliable for best-in-class service from all perspectives.

GrowServe E-Solutions Private Limited

காலம் காலமாய் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நம் நாட்டு வியாபாரிகளையும், வர்த்தகர்களையும், சிறு தொழில் முனைவோரையும், அவர்தம் வணிகத்தையும் காப்பாற்றும் பொருட்டு துவங்கப் பட்டதே நம்மகடை மின்வணிகம்.

பல்நாட்டு பெரு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் ஒட்டு மொத்தமாக அனைத்து வர்த்தகங்களையும் தமதாக்க மாபெரும் யுக்திகளோடும், எண்ணிப்பார்க்க இயலாத அளவில் முதலீடு செய்தும் முழு முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் சிறு வியாபாரிகள் அடியோடு ஒதுக்கப்பட்டு அவர்தம் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடிய நிலை விரைவில் வந்து விடும். மேலும், நம் நாட்டுப் பொருளாதாரமும், வணிகமும் வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

நம் வர்த்தகர்களைக் காப்பாற்ற வேண்டும், நம் நாட்டுப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த உறுதியோடு துவங்கப்படுவதுதான் ”நம்மகடை” மின் வணிகம். போர்க்கள நடவடிக்கை போன்ற முறையில் இச்செயல்பாட்டில் ஈடுபடுகின்றோம்.

எது எங்களை இந்த மின்வணிகத்தில் ஈடுபடத் தூண்டியது ?

இந்திய நாட்டின் தொழிலிலும், வர்த்தகத்திலும் பல்நாட்டுப் பெருநிறுவனங்கள் உட்புகும் முறையும், வேகமும் அச்சுறுத்தும் வண்ணமாக இருக்கின்றது. மாபெரும் அளவில் முதலீடு செய்து ஒட்டு மொத்த வர்த்தகத்தையும் கைப்பற்ற வேண்டுமென்ற முனைப்போடு பெரு நிதியுடன் அவர்கள் வருகின்றார்கள். அவர்கள் போக்கிலேயே அவர்களை அனுமதித்தால், நாட்டின் வணிகம் அனைத்தையும் முழுங்கிவிட்டு, பாரம்பரிய வர்த்தகர்களைக் கைப்பொம்மைகளாக்கி விடுவார்கள்.

வர்த்தகம் ஒன்றே எமது நோக்கம் என்றுதான் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவுக்குள் வந்தது. இறுதியில் பாரத நாட்டை முழுவதும் ஆக்கிரமித்து அடிமையாக்கியது. இன்றைய நிலை என்ன ? உலக வர்த்தக நிறுவனமும், உலக வங்கியும், இவைகளின் பின்னணியில் உள்ள வளர்ந்த நாடுகளும் நம் அரசுக்கு ஆணையிடுகின்றன. நம்நாட்டு பொருளாதாரம் எவ்வாறு இருக்கவேண்டும் என இவை தீர்மானிக்கின்றன. நமது பாரம்பரிய ஞானம், வழிவழி வந்த வணிகம் இவற்றில் எல்லாம் இந்நிறுவனங்கள் அதிவிரைவாகவும், நிலையான உறுதியோடும் ஆக்கிரமிப்பு செய்கின்றன.

மத்தியிலும் சரி, மாநில அளவிலும் சரி ஆட்சி புரிந்த, புரியும் அரசு அமைப்புகள் (கட்சி வேறுபாடில்லாது) உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைகளுக்கேற்பவே செயல் படுகின்றன. அதில் தீவிரமாகவும் இருக்கின்றன.

இவ்வமைப்புகளின் நிழலில் இயங்கும் பெருவர்த்தக நிறுவனங்களால் நடத்தப்பெறும் மின்வணிக மையங்களுக்கு எண்ண இயலா அளவு நிதி உண்டு. எவ்வளவு நட்டம் வந்த போதிலும் நீடித்த காலத்திற்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய அளவு பணபலம் உண்டு. அவர்களின் முதலீடுக்கு இங்கு எவரும் சமமாக இருக்க இயலாநிலையில் அவர்களின் வணிக இலக்கு இமாலய அளவுக்கு அமைந்திருக்கின்றது. அவர்களின் விளம்பரங்களோ பிரமாண்டமான மெகா அளவில். அவர்கள் தரும் தள்ளுபடியும், கவர்ச்சியான திட்டங்களும் நமது சிறு வியாபாரிகளால் நினைத்துக்கூட பார்க்கமுடியா அளவில் உள்ளன. அவர்களின் பிரசன்னம் மகாவலிமையோடு கூடிய விஸ்வரூபமாக உள்ளது.

சிறு வியாபாரிகள், குடும்பத்தை மையமாகக் கொண்டு இயங்கும் வர்த்தகங்கள் மற்றும் பலதரப்பட்ட தொழில் முனைவோர் ஆகியோர் எல்லாம் தமது வியாபாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும். நாம் நினைப்பதைவிட அதிவிரைவிலேயே இது நிகழும். இதைத் தடுக்க துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விரைவாக, காலதாமதமின்றி, உடனடியாகவும், உறுதியாகவும் செயல் பட வேண்டும். அவ்வாறு எடுக்கும் சரியான திட்டங்களே சிறு வியாபாரிகள் சரிந்து விடாமல் தடுக்கும் அரணாய் அமையும்.

இச்சூழலில்தான் சிறு வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு நம்மகடை என்ற பெயரில் மின்வணிகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதாரச் சூழலின் காலப்போக்கினை – செல்திசையை – நம்மால் மாற்றிப்போட இயலாது. மாறாக, அதன் வழியே சென்று, நம் வசப்படுத்த வேண்டும். பழைய முறைகளை மட்டும் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. பூனை, கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா ? மணலில் தலையைப் புதைக்கும் நெருப்புக் கோழிபோல் இன்றையச் சூழலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், உலகம் மாறவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த அளவில் விவேகம் ஆகும் ? புதிதாகச் சிந்திக்க வேண்டும். நிகழ்காலச் சூழலுக்கொப்ப புதிய முறைகளைக் கைக்கொள்ள வேண்டும். அதனை திண்ணமாக - உறுதியோடு – துரிதமாக, விரைவாகச் செயல் முடித்தல் வேண்டும்.

இதனை மனத்திற்கொண்டே நம்மகடை மின்வணிகத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இன்றையச் சூழலின் போக்கிலேயே நம்மை இணைத்து அவ்வழியின்மூலம் நம் நாட்டு வாணிகத்தையும், வர்த்தகர்களையும் பாதுகாக்கும் அரணே இத்திட்டம். சிறு வர்த்தகர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சேவைசெய்து அதன்மூலம் உங்கள் ஆதரவில் செயல்படத் துவங்கப்பட்டுள்ளதே நம்மகடை மின் வணிகத் திட்டம். நம்மகடை ஒரு கடை அல்ல…மாறாக நம்மகடை கடைகளின் சங்கமம். ஒரு குடையில் பல கடைகளை அறிமுகம் செய்து வட்டார வாணிகத்தைக் காப்பாற்றும் மாபெரும் இயக்கம்.

காலத்தின் கட்டாயத்தையும், இன்றையச் சூழல் சுட்டிக்காட்டும் வழிமுறைகளையும் பொருட்படுத்தாமல் புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன ?

பல்நாட்டு நிறுவனங்கள் இந்தமண்ணில் வேரூன்றி நிலைத்திருக்க பல்வேறு யுக்திகளைக் கையாளுகின்றனர்.

ஆக்கிரமிப்பான விற்பனைத் திட்டங்கள், வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள், மாபெரும் நட்டம் ஏற்படினும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் அளவுக்குள்ள நிதிநிலைமை இவையெல்லாம் அவர்கள் கையில் உள்ள பலம்வாய்ந்த ஆயுதங்கள். இவைகளின் மூலம் அவர்கள் நிலைத்து வேரூன்ற வாய்ப்புண்டு. அவ்வாறு தம் வணிகத்தை நிலைநாட்டியபின்னர், அவர்கள் வைத்ததுதான் சட்டம். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் அல்லவா ? பின்னர் அவர்கள் இடும் ஆணையெல்லாம் நடந்துவிடும். நம்நாட்டு வணிகர்கள் ஆதாரத்தை இழந்து் விடுவார்கள், வாடிக்கையாளர்களுக்கு வேறு வழியும் கிடையாது. பல்நாட்டு நிறுவனங்கள் மட்டுமே கொடிகட்டிப் பறப்பார்கள். அந்த நிலை நமக்கும், நம் நாட்டிற்கும் வேண்டுமா ? திண்ணமான முடிவுகள் எடுத்து உறுதியுடன் செயல்பட்டாலன்றி நம்மை இழந்து விடுவோம். நிரந்தர பொருளாதார அடிமைகளாக ஆகிவிடுவோம். இந்தியா வல்லரசாக முடியாது, வல்லரசுகளின் கையில் சிக்கிய வலியிழந்த நாடாகவே நாம் இருப்போம். இன்றொரு விதி செய்குவோம். ஒன்றுபட்டால் நாம் மாறுதலை ஏற்படுத்த முடியும். ”நம்மகடை மின்வணிகம் அவ்வாறான மாறுதலை ஏற்படுத்த தன்னை அர்ப்பணிக்கின்றது.

எங்களின் நோக்கம்

நம் வட்டார வாணிகம் வர்த்தகர்கள், சிறு தொழில் புரிவோர் போன்றோரை பல்நாட்டுப் பொருளாதார ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுதல்.

பாதுகாப்பானதும், நம்பிக்கைக்குரியதுமான ஒரு வாணிக மேடையை அமைத்துத் தருவதன் மூலம் சரியான விலையில் வர்த்தகர்கள் விற்கவும் நியாயமான விலையில் நுகர்வோர் வாங்கவும் வசதி ஏற்படுத்துதல் .

ஒழுங்கு நெறிகளின் படி வாணிகத்தில் முறையான பழக்கங்களையும், அமைப்பு முறைகளையும் கையாளுவதன்மூலம் தேசியப் பொருளாதாரத்திற்கு பங்களித்தல்

நுகர்வோர் தமக்கு அருகாமையில் உள்ள வர்த்தகரைத் தேர்ந்தெடுத்து மிகச்சிறந்த தரமான பொருட்களை போட்டி விலையில் வாங்கத் தேவையான சேவை பரிதல்.

வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் தொழில் நுட்பத்தில் மதிக்கூர்மை உடைய முறைகளையும், பழக்கங்களையும் தொடர்ந்து தருவதற்குத் தேவையான ஆராய்ச்சி, புது முறைகள், , தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை இடையராது அளித்தல்.

எமது தொலை நோக்கு

இந்திய வணிகத்தையும், வட்டார வழக்குகளையும் பாதுகாத்து நாடுதழுவிய அளவில் மின்வணிகம் மூலம் சேவைசெய்யும் அமைப்பே “நம்மகடை மின்வணிகம்” அதே நேரத்தில் நுகர்வோர் நலனை இணையாகக் கொண்டு வாங்கும் விலை, தரம், வாடிக்கையாளர் திருப்தி இவற்றில் முழு நிறைவை நுகர்வோருக்குத் தரும். வர்த்தகர்களைப் பொருத்தமட்டில் இந்திய வர்த்தகத்தைப் பாதுகாப்பதே தன் முதல் கடமையாகக் கொண்டு பணியாற்றும் ஒரு அமைப்புதான் நம்மகடை. இந்திய நுகர்வோரைப் பொருத்தமட்டில் எல்லாக் கோணங்களிலும் நம்பத்தகுந்ததும் வணிகச்சந்தையில் நேர்த்திமிக்க, மிகச்சிறந்ததுமான (இணையதள) வலைவாசல் நம்மகடை .